முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,071 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,071 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 1,071 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,07,962 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 306 பேருக்கும், கோவையில் 109 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்றைய அறிவிப்பில் மேலும் 12 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 6 பேர், தனியார் மருத்துவமனையில் 6 பேர். இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 11,995 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,157 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,472 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் இன்னும் 9,495 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →