முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்.
பகிர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திங்கள்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் தெய்வானை தலைமை வகித்தார். அப்போது அவ்வமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் பல மாதங்களாகியும் ஊராட்சி ஒன்றியத்தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும், அதனால் இந்த மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவதாகவும் கூறி முழக்கமிட்டனர்.

பின்னர் 100 நாள்கள் வேலைத்திட்டத்தை 200 நாள்களாக மாற்றவேண்டுமெனவும்,தொடர்ந்து சமையல் எரிவாயு உருளைகள் விலையேற்றமடைந்து வருவதைக் கண்டித்தும்,டெல்லியில் தொடர்ந்து பல வாரங்களாகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கமிட்டனர். 

அதனைத்தொடர்ந்து பாளையம்பட்டி காமராசர் நகரில் வாருகால் வசதி, சாலைவசதி, தெருமின்விளக்குகள் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரவேண்டுமெனவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வலியுறுத்தி அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். உடன் இந்நிகழ்ச்சியில் சுமார் 50க்கு மேற்பட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேரில் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →