தசைச்சிதைவு நோயாளிகளுக்கு பகல் நேர பராமரிப்பு மையங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்
தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலம், திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பகல் நேர பராமரிப்பு மையங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடுதசைச்சிதைவு நோயாளிகளுக்கு பகல் நேர பராமரிப்பு மையங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்
தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலம், திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பகல் நேர பராமரிப்பு மையங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம், தருமபுரி, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 10 பகல் நேர பராமரிப்பு மையங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (21.12.2020) தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம், தருமபுரி, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 10 பகல் நேர பராமரிப்பு மையங்களை திறந்து வைத்தார். மேலும், பார்வையற்ற மற்றும் கேட்கும்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் பிறருடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் தக்க செயலிகளுடன் கூடிய 10,000 திறன்பேசிகளை பார்வையற்ற மற்றும் கேட்கும்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த 11.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பகல்நேர பராமரிப்பு மையங்கள் 4 மாவட்டங்களில் அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது, கூடுதலாக 10 மாவட்டங்களில், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்களுடன் கூடிய பகல் நேர பராமரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது அன்றாட செயல்பாடுகளுக்கு உதவிடும் வகையில், சேலம், திருவண்ணாமலை மாவட்டம் - வயதவாசி வட்டம், சென்னாவரம், திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம், தருமபுரி, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மொத்தம் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உபகரணங்களுடன் கூடிய 10 பகல் நேர பராமரிப்பு மையங்களை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்தார். இம்மையங்களை பராமரிக்க அரசின் பங்களிப்பாக ஆண்டுதோறும் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
2020-2021 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர், பிறரை எளிதில் தொடர்பு கொள்வதற்கு, தக்க செயலிகளுடன் கூடிய 10,000 திறன்பேசிகள், பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பார்வையற்ற மற்றும் கேட்கும்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் பிறருடன் எளிதில் தொடர்பு கொள்ளவும், நவீன தகவல் தொழில்நுட்பங்களை எளிதில் பயன்படுத்திட ஏதுவாகவும், 10 கோடி ரூபாய் செலவில் தக்க செயலிகளுடன் கூடிய 10,000 திறன்பேசிகளை பார்வையற்ற மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, தமிழக முதல்வர் பழனிசாமி இன்று 7 பார்வை மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு திறன்பேசிகளை வழங்கி, துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர்ல் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணிபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவைபுரிந்த சிறந்த சமூகப் பணியாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருதினை அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ். பிரபாகர் அவர்களுக்கும், 2019-ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருதினை அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப., அவர்களுக்கும், 2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருதினை அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரிக்கும் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வழங்கி கௌரவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.