தமிழ்நாடு

தபால் வாக்கிற்கு எதிரான வழக்கு ஜனவரி 7-க்கு ஒத்திவைப்பு

DIN

முதியவர்கள் தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஜனவரி 7-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

டிசம்பர் 3 இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் திமுகவின் மனுவும் சேர்த்து ஜனவரி 7-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே தபால் வாக்குகளை வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தபால் வாக்கு முறைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்களுக்கு தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் தொடரப்பட்ட மனுவில் தெரிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மனுக்களின் மீதான விசாரணையை ஜனவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

SCROLL FOR NEXT