அரசியலுக்கு ஒருவர் ஏழையாக வந்து மக்களை எழையாக்குவதே தவறு: கமல் பேச்சு
அரசியலுக்கு ஒருவர் ஏழையாக வந்து மக்களை எழையாக்குவதே தவறு என்று மநீம தலைவர் கமல் பேசியுள்ளார்.
சென்னை: அரசியலுக்கு ஒருவர் ஏழையாக வந்து மக்களை எழையாக்குவதே தவறு என்று மநீம தலைவர் கமல் பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் துவங்கி தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி புதனன்று சென்னையில் வியூகம் என்ற பெயரில் வழக்கறிஞர்களுடனான சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அதில் பேசுகையில் அவர் கூறியதாவது:
வாழ்ந்தேன், வரி செலுத்தினேன், நல்லவனாக இருந்தேன் என்பது மட்டும் போதாது; மக்களுக்காக என்ன செய்தேன் என்பதே முக்கியம்.
பணம் படைத்தவர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஒருவர் ஏழையாக அரசியலுக்கு வந்து பணக்காரர் ஆகி மக்களை ஏழையாக்குவதே தவறு.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.