யஸ்வந்த் 
தமிழ்நாடு

கொய்யாபழம் பறிக்கச் சென்ற 5 வயது சிறுவன் சாக்கடை கால்வாயில் விழுந்து பலி

திருச்சியில் கொய்யாபழம் பறிக்கச் சென்ற 5 வயது சிறுவன் சாக்கடை கால்வாயில் விழுந்து பலியானார்.

DIN

திருச்சி: திருச்சியில் கொய்யாபழம் பறிக்கச் சென்ற 5 வயது சிறுவன் சாக்கடை கால்வாயில் விழுந்து பலியானார்.

திருச்சி, தென்னூர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பெயிண்டர் பிரேம்குமார்-நளினி தம்பதியரின் 5 வயது மகன் யஸ்வந்த் . 

இந்நிலையில் புதன்கிழமை இரவு 8 மணி அளவில் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் யஸ்வந்த் திடீரென காணமால் போனார்.

இதனால் பதட்டமடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடிய நிலையில் , வீட்டின் அருகில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயில் சிறுவன் யஸ்வந்த் பிணமாக கண்டெடுக்கப்பட்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தில்லை நகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் தவறி விழுந்து இறந்தானா? அல்லது யாரேனும் கொலை செய்து கழிவு நீர் கால்வாயில் வீசி சென்றார்களா? என்ற பல்வேறு கோணங்களில், சம்பவம் குறித்து தாயார் நளினி அளித்த புகாரின் பெயரில் தில்லை நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அக்கம்பக்கத்து சிறுவர்கள் அளித்த தகவலின்படி, அந்த சாக்கடை கால்வாயின் அருகே உள்ள கொய்யா மரத்தில், கொய்யா பழம் பறிக்கச் சென்றதில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

என்றாலும், சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, முழுமையான தகவல் கிடைக்கும் என தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

' அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் '

ஹோட்டலுக்குள் நுழைந்து சுற்றிப்பார்த்த காட்டு யானைகள்!

சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

வனத்துறையினரின் வாகனத்தை ஆவேசமாக தாக்கிய காட்டு யானை! பதைபதைக்கும் விடியோ!

காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT