மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு போட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். 
தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும்: எல்.முருகன் பேட்டி

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை விரைவில் பாஜக தலைமை அறிவிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

DIN

மதுரை: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை விரைவில் பாஜக தலைமை அறிவிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

மதுரையில் இருந்து சென்னை சென்ற அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தமிழக பாஜக சார்பில் 1000 இடங்களில் விவசாயிகளை சந்தித்து வேளாண் திருத்த சட்டங்களின் பலன்கள் விளக்கபட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக விவசாயிகளுக்கு  ரூ.2000 ஊக்கத்தொகை  நாளை முதல் வழங்கப்பட உள்ளது. 

தமிழகத்தில் திமுகவின் போராட்டம் வெற்றி அடைய வில்லை. திமுக ஆட்சியில் போது  42-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. மேலும் திமுகவினர் கடந்த 2006 ஆம் ஆண்டு அவர்களது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு சாதகமாக விளை பொருள்களை எந்த பகுதியிலும் விற்பனை செய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர். இன்று அதே சட்டத்தை வேறுவிதமாகப் பேசி வருகின்றனர்.

பாதிரியார் எஸ்ரா. சற்குணம் இறைவனுக்கு தோன்றாமல் திமுக கூட்டங்களில் பங்கேற்று பிரதமரை உரிமையில் பேசுவதை கண்டிக்கிறோம் .

அதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்வேண்டும். இல்லை என்றால் பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும். தமிழக அரசு பொங்கல் திருநாளை மக்கள் கொண்டாடும் வகையில் ரூ.2500 அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று முருகன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

ஆதிமல்லம்மா கோயில் திருவிழா

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

காட்டுப்பன்றி கடித்ததில் விவசாயி உயிரிழப்பு

ஒசூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை

SCROLL FOR NEXT