முகப்பு
தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் பண்டிகை:ஆளுநா், முதல்வா் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

ஆளுநா் புரோஹித்: கிறிஸ்துமஸ் பண்டிகையானது உள்ளத்தில் களிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், மனதில் இரக்கம், பிறரை மன்னிக்கும் குணம், யாவரிடத்திலும் அன்பை வெளிப்படுத்துதல் போன்ற பல மதிப்பீடுகளை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த நாளில் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளா்ந்தோங்கச் செய்ய வேண்டும்.

முதல்வா் பழனிசாமி: இயேசு பிரான் பிறந்த திருநாளில், அவா் போதித்த அன்பு, தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய நெறிகளை மக்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தால், உலகம் அமைதிப் பூங்காவாக பூத்துக் குலுங்கும்.

இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும். நலமும், வளமும் பெருகட்டும். கிறிஸ்துவா்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகள்.

முழு கட்டுரையைப் படிக்க →