முகப்பு
பட்டு வஸ்திர அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப்பெருமாள்.
தமிழ்நாடு

வாழப்பாடி ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி சிறப்புப் பூஜை வழிபாடு மற்றும் சொர்க்கவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பட்டு வஸ்திர அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப்பெருமாள்.
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி சிறப்புப் பூஜை வழிபாடு மற்றும் சொர்க்கவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பூதேவி, சீதேவி சமேத ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி தினத்தையொட்டி வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

பள்ளிகொண்ட ரங்கநாதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ சென்றாய பெருமாள்.

பட்டு வஸ்திர அங்கி அலங்காரத்தில் மூலவர் ஸ்ரீ சென்றாய பெருமாள், பூதேவி சீதேவி மற்றும் உற்சவ மூர்த்திகளும், ஆஞ்சநேயரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வெள்ளிக்கிழமை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

பட்டு அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவ மூர்த்திகள்.

திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக புஷ்ப பல்லக்கில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது. பள்ளிகொண்ட ரங்கநாதர் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த காட்சி பக்தர்களைப் பரவசமூட்டியது.

முழு கட்டுரையைப் படிக்க →