தமிழ்நாடு

பர்கூர் அருகே 8 அடி மலைப் பாம்பு உயிருடன் மீட்பு 

DIN

பர்கூர் அருகே உள்ள திம்லா மேடு என்ற கிராமத்தில் வசிப்பவர் வெங்கட்ராமன்(55). இவர் தனது விளைநிலத்தில் சோளப்பயிர் சாகுபடி செய்துள்ளார். இன்று அவர், விளைநிலத்தைப் பராமரிக்கச் சென்றார். அப்போது சோள பயிர்களுக்கு இடையே மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டு அச்சத்தால் கூக்குரல் எழுப்பினார்.

இதையடுத்து, அங்கு கூடிய கிராம மக்கள் மலைப்பாம்பை உயிருடன் பிடிக்க முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படைவீரர்கள் மகேந்திரன் வெங்கடாசலம் ஆகியோர் திம்லா மேடு கிராமத்திற்கு விரைந்தனர். 

சோளப் பயிர்களுக்கு இடையே மறைந்திருந்த மலைப் பாம்பை உயிருடன் பிடித்து வனக்காப்பாளர் பழனியிடம் ஒப்படைத்தனர். உயிருடன் பிடிபட்ட பாம்பை வனத்துறையினர் பெல்ரம்பட்டி காப்புக் காட்டில் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT