முகப்பு
தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் போராட்டம்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சனிக்கிழமை ரேஷன் கடை பணியாளர்கள் நியாயவிலைக்கடை கார்டுகளை பதிவு செய்து பொருள்கள் வழங்கும் இயந்திரத்தை(பி.ஓ.எஸ்) ஒப்படைப்பு போராட்டம் நடத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
உத்தமபாளையத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் போராட்டம்
பகிர்:

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சனிக்கிழமை ரேஷன் கடை பணியாளர்கள் நியாயவிலைக்கடை கார்டுகளை பதிவு செய்து பொருள்கள் வழங்கும் இயந்திரத்தை(பி.ஓ.எஸ்) ஒப்படைப்பு போராட்டம் நடத்தினர்.

உத்தமபாளையம் வட்டாரத்தில் 180 மேற்பட்ட நியாயவிலைக்கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பொருள்களை குறித்து ஸ்மார்ட் கார்டை பதிவு செய்ய இயந்திரம் (பி.ஓ.எஸ்) வழங்கப்பட்டுள்ளது.  இதன்மூலமாக போலி ரேஷன் கார்டை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருள்களை முழுமையாகக் கொடுக்கவும்  இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், கைரேகை பதிவு ஆகவில்லை எனப் பல காரணங்களைக் கூறி, அந்த இயந்திரத்தை ஒப்படைக்குப் போராட்டத்தை  அனைத்து ரேஷன் கடை பணியாளர்கள் மேற்கொண்டனர். அதன்படி, சனிக்கிழமை உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் திரும்ப ஒப்படைத்தனர். ஆனால், இந்திரத்தை அலுவலர் திரும்பப் பெற மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து, தரமான இயந்திரம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த பணியாளர்கள் கோரிக்கை மனுவை மட்டும் அலுவலரிடம் கொடுத்துச் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →