தமிழ்நாடு

கோவையில் நான்கு சக்கர வாகனத்தின் பம்பரை கழற்ற வைத்து எச்சரிக்கை

DIN

கோவையில்  நான்கு சக்கர வாகனத்தின் முன்பு உள்ள பம்பரை கழற்ற வைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பினர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள்.

நான்கு சக்கர வாகனங்களில் விபத்துகளில் வாகன சேதங்களை தவிர்ப்பதற்காக முன்பகுதியில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதுதவிர, தற்போது உயர்நீதிமன்றமும் தமிழகத்தில் வாகனங்களில் இதுபோன்று பம்பர் பொருத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரட்டுள்ளது.

 இதன்படி மாநிலம் முழுவதும் அரசின் வழிகாட்டுதலின்படி வாகனங்களில் பம்பர் பொருத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கோவை வட்டார போக்குவரத்து அலுவலகர்கள் சாலையில் செல்லும் டாட்டா ஏசி ஆட்டோக்கள், கார்கள் ஆகிய வாகனங்களை வழி மறித்து பம்பரை கழட்ட வைத்து அபராதம் விதித்தனர். மேலும் இது போன்று பொருத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT