சிதம்பரத்தில் நியாயவிலைக்கடை கடை பணியாளர்கள், பிஓஎஸ் கருவிகளை ஒப்படைக்கும் போராட்டம்
தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நியாயவிலைக்கடைகளில் கைரேகை மூலம் பொருள்களை வழங்க பயன்படுத்தும் பிஓஎஸ் கருவிகளை ஒப்படைக்கும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம்: தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நியாயவிலைக்கடைகளில் கைரேகை மூலம் பொருள்களை வழங்க பயன்படுத்தும் பிஓஎஸ் கருவிகளை ஒப்படைக்கும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நியாயவிலைக்கடைகளில் வழங்கப்பட்டுள்ள கைரேகை மூலம் பொருள்களை வழங்க பயன்படுத்தும் பிஓஎஸ் கருவிகளை தொழில்நுட்ப கோளாறு காரணமாக சரியாக செயல்படாததாலும், சரியான இணையதள வேகம் இல்லாததால் பொருள்கள் வழங்குவதில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதால் அக்கருவியை திருப்பி வழங்கும் போராட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மாநிலை துணைத் தலைவர் துரை.சேகர், மாவட்ட நிர்வாகிகள் நடராஜ், நரசிம்மன், நகர நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, கனகசபை, யோகராஜ், சிவராஜன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நியாவிலைக்கடை பிஓஎஸ் கருவிகளை வட்ட வழங்கல் அலுவலகத்தில் திருப்பி வழங்க சென்றனர். ஆனால் அதிகாரிகள் வாங்க மறுத்தததால், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.