தமிழ்நாடு

தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

DIN

தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணிக்கு, பிற துறைகளில் உதவியாளர்களாக பணியாற்றுபவர்களை பணி மாறுதல் அடிப்படையில் நியமிப்பதற்கான வயது வரம்பு பொருத்தமற்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், ஏராளமான பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வாய்ப்பை இழந்து வருகின்றனர். நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாமல், ஒருவரின் விருப்பமான பணி வாய்ப்பை பறிப்பது மிகவும் அநீதியானது ஆகும்; அந்த அநீதி போக்கப்பட வேண்டும்.

தமிழக அரசின் நான்காம் தொகுதி பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40-ஆகவும், முதல் தொகுதி  பணிகளுக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம்  தொகுதி பணிகளுக்கு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. இவ்வாறாக அனைத்து பணிகளுக்கு வயதுவரம்பு கூடுதலாக இருக்கும் போது, தலைமைச்செயலக உதவியாளர் பணிக்கு மட்டும் மிகவும் குறைவாக 30 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டும் தான் பணியில் சேர முடியும் என்பது நியாயமல்ல. எந்தத் தொகுதி பணியாக இருந்தாலும் அதிகபட்ச வயது வரம்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு  சில ஆண்டுகள் சலுகைகள் வழங்கப்படும். ஆனால், தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு மட்டும் அந்த சலுகை வழங்கப்படாதது சமூகநீதிக்கு எதிரான செயல் ஆகும். அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழக அரசின் எந்த ஒரு பணியும் நியாயமற்ற காரணங்களைக் காட்டி, தமிழக குடிமக்களுக்கு மறுக்கப் படக் கூடாது. எனவே, தலைமைச்செயலக உதவியாளர் பணிக்கு பணிமாறுதல் அடிப்படையிலான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்; அதன்மூலம் போட்டியை பரவலாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT