பிரிட்டனிலிருந்து வந்த நால்வருக்கு கரோனா: மாதிரிகளில் வேறுபாடு
பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய நான்கு கரோனா நோயாளிகளின் மாதிரிகளில் வேறுபாடு காணப்படுவதாக புனே ஆய்வு மையம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய நான்கு கரோனா நோயாளிகளின் மாதிரிகளில் வேறுபாடு காணப்படுவதாக புனே ஆய்வு மையம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய 13 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அவர்களது கரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் இன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 13 பேரில் நான்கு பேருக்கு மாதிரிகளில் வேறுபாடு காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, கரோனா பாதித்த நான்கு பேருக்கும் மீண்டும் பரிசோதனை நடத்த ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் திரும்பிய நான்கு பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களது மாதிரிகளில் வேறுபாடு காணப்படுவதாகவும், எனினும் இரண்டாவது ஆய்வுக்குப் பிறகே அவர்களுக்கு பாதித்திருப்பது பிரிட்டனில் பரவியிருக்கும் அதிதீவிர கரோனாவா என்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.