உத்தமபாளையம் அருகே ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
உத்தமபாளையம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி யில் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி யில் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராயப்பன்பட்டி அந்தோணியார் தெருவைச் சேர்ந்த மரிய சலேத் மகன் சேகர். முத்தம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியில் உள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அந்தோணியார் தெருவில் உள்ள இவரது வீட்டில் வெடிச்சத்தம் கேட்டது.
அப்போது வெளியே வந்து பார்த்த சேகர் குண்டு வீசி வெடிக்கச் செய்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் ரிமெடி காவல்துறை வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.