தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்வரத்து மேலும் சரிவு

DIN


மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் சரிந்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால், பாசனத் தேவை அதிகரித்துள்ளது. நொடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு தற்போது 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது. 

திங்கள்கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.66 அடியிலிருந்து 106.50 அடியாகச் சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,235 கன அடியிலிருந்து 1,062 கன அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 3,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 73.52 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT