தமிழ்நாடு

தஞ்சை விவசாயிகள் போராட்டத்துக்குச் சென்ற 50 கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது 

DIN

தஞ்சையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருமங்கலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேர்களை திருமங்கலம் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தஞ்சாவூரில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க திருமங்கலம் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை  திருமங்கலத்திலிருந்து வேனில் புறப்பட்டுச் சென்றனர். 

இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் காவலர்கள் வேனை கப்பலூர் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தினர். இதனால் காவலர்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும்  இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து வேனில் வந்தவர்கள் கப்பலூர் சுங்கச்சாவடியில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மதுரை திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்படையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து திருமங்கலம் நகர் காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT