தமிழ்நாடு

தம்மம்பட்டியில் போலி ரேசன் கார்டுகள் குறித்து ஆய்வு செய்யக் கோரிக்கை!

DIN

தம்மம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் போலி ரேசன் கார்டுகள் உள்ளனவா, என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக முதல்வர், பொங்கல் பண்டிகைக்காக அனைத்து அரிசி அட்டைகளுக்கும் முழுக்கரும்புடன், பச்சரிசி, வெல்லம்,  முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2500ஐ ரொக்கமாக தர உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தம்மம்பட்டி மற்றும் செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி, நாகியம்பட்டி,உலிபுரம், வாழக்கோம்பை, ஜங்கமசமுத்திரம், மூலப்புதூர், தகரப்புதூர், மண்மலை பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் கணிசமான அளவு, போலி ரேசன் கார்டுகள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

போலியான ரேசன் கார்டுகளை முழுவதும் கண்டுபிடிக்காத நிலையில், போலி ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்படும் ரூ.2500 ரொக்கப் பணம் மூலம் பெரும் அளவில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, 

"கெங்கவல்லி தாலுகாவில், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் 2500 ரூபாய் வழங்குவதற்கு முன்னர், வருவாய்த் துறையினர், போலி ரேசன் கார்டுகள் உள்ளனவா என்று, அனைத்து ரேசன் கடைகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT