தமிழ்நாடு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். பொய் பிரசாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.

DIN

நாமக்கல்: இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். 
பொய் பிரசாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அலங்காநத்தம் பிரிவு சாலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: கரோனா காலகட்டத்தில் மக்களுக்கான தேவைகளை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், எடப்பாடி ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என குற்றம்சாட்டி வருகிறார்.  

நான் பதவியேற்று மூன்று ஆண்டுகள் 10 மாத காலத்தில் ஏராளமான திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு இருந்தும் மு.க. ஸ்டாலின் பொய்களைக் கூறி வருகிறார். அவர் கண்ணாடி அணிந்து பார்த்தால் இந்த அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றி தெரியவரும். 

வரும் தேர்தலில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை திமுக வெளியிடக்கூடும். அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். திமுகவினர் தவறான தகவல்களை தெரிவித்தால் நம்பி விட வேண்டாம். 

பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 4 ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும். பொங்கல் பரிசை பெற்றுக் கொண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலில் உற்சாகத்துடன் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு திருட்டு: காங்கிரஸ் கையொப்ப இயக்கம் தொடக்கம்

கல்லூரியில் மருத்துவ முகாம்

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி: என்எல்சி தலைவா் தகவல்

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT