பேரீச்சம் பழத்துக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ 15.26 லட்சம் தங்கம் பறிமுதல்
பேரீச்சம் பழங்களுக்குள் மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்ட ரூ 15.26 லட்சம் மதிப்புடைய தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
பேரீச்சம் பழங்களுக்குள் மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்ட ரூ 15.26 லட்சம் மதிப்புடைய தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
சௌதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போதுபோது, பேரீச்சம் பழப் பசைப் பொட்டலங்களுக்குள் தங்கக் கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து 295 கிராம் எடையுடைய 15.26 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடந்து வருகின்றனர்.