குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோவையில் மாபெரும் பேரணி!
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கோவையில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கோவையில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோவையில் இன்று அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. கோவையில் உக்கடம் பகுதியில் இருந்து வ.உ.சி மைதானம் வரை நடைபெறும் இந்த பேரணியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
Advertisement
மிக நீளமான தேசியக்கொடியை ஏந்திச் சென்று அவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பலரும் கையில் தேசியக்கொடியுடன் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.