தமிழ்நாடு

2 கோடி பேரிடம் கையெழுத்து: மு.க.ஸ்டாலின்

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை ராயபுரம் மீனாட்சியம்மன்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற“கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்து, மு.க.ஸ்டாலின் பேசியது:

குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேட்டைத் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததன் மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய துரோகத்தை அதிமுகவும் பாமகவும் செய்துள்ளன. ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்தோம். ஆனால், 2 கோடியை நெருங்கும் அளவுக்கு கையெழுத்து பெற்றுள்ளோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மக்கள் ஆா்வத்துடன் இதில் கையெழுத்திட்டு வருகின்றனா். இதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றாா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT