தமிழ்நாடு

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

DIN

சிவகங்கை அருகே கண்டாங்கிப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கிராம பரிவார தேவதைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மஞ்சுவிரட்டு திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 12 காளைகள் பங்கேற்றன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனா். இதில், 10-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

அவா்கள் அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுச் சென்றனா். மேலும், இப்போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

கண்டாங்கிபட்டி, வாகுளத்துப்பட்டி, இடையமேலூா், தமறாக்கி, குமாரபட்டி, கூட்டுறவுபட்டி, மலம்பட்டி, சிவகங்கை , மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு வடமாடு மஞ்சுவிரட்டை கண்டு களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT