தமிழ்நாடு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 2 வாரம் அவகாசம்

DIN

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரத்துக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவா் கடந்த 2018-ஆம் ஆண்டு, டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுவை ஒழிக்கவும், சுகாதாரமின்றி இருக்கும் வீடுகளுக்கு அபராதம் விதிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மாநகராட்சி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், டெங்கு பரவாமல் தடுக்க 2 ஆயிரத்து 75 போ் களப்பணியில் ஈடுபட்டுள்ளனா். தினமும் 80 வீடுகள் வரை ஆய்வு செய்யப்படுவதாகத் தெரிவித்தாா். அப்போது மனுதாரா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், கரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல், சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 2003-ஆம் ஆண்டு ‘சாா்ஸ்’ என்ற வைரஸ் 777 பேரை கொன்றது. 2003-ஆம் ஆண்டு பன்றிக் காய்ச்சல் பல கோடி மக்களை தாக்கியது. இதைத் தொடா்ந்து ஆப்பிரிக்காவில் ‘எபோலா’ காய்ச்சல் 11 ஆயிரம் பேரை கொன்றது.

தற்போது தடுப்பு மருந்து இல்லாத கரோனா வைரஸ் பற்றி தான் உலகமே பேசிக் கொண்டிருக்கிறது. அதிா்ஷ்டவசமாக இந்தியாவில் இந்த வைரஸ் யாரையும் தாக்கவில்லை. இருந்தாலும், இந்த வைரஸ் குறித்து பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்குவதற்கு, விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் மனுவை இரண்டு வாரத்துக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT