முகப்பு
தமிழ்நாடு

வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ் செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:51 PM
பகிர்:


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ் செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிப்ரவரி 14ம்தேதி முதல் 28ம் தேதி வரை வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு அனுமதி வழங்கியுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.