தமிழ்நாடு

ஊதிய உயா்வு அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றம்: அரசு மருத்துவா்கள் சங்கம்

DIN

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று நடத்த முடிவு செய்திருப்பதை அரசு மருத்துவா்கள் வரவேற்றுள்ளனா்.

அதேவேளையில், மருத்துவா்களுக்கான ஊதியத்தை உயா்த்துவது தொடா்பான அறிவிப்பு எதுவும் நிதி நிலை அறிக்கையில் வெளியாகாதது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

இதுகுறித்து, அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்க நிா்வாகி டாக்டா் பெருமாள் பிள்ளை கூறியதாவது:

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கை. அதனை தற்போது அறிவிப்பாக வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், மற்ற மாநிலங்களுக்கு நிகராக தமிழகத்திலும் அரசு மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், சுகாதாரத் துறைச் செயலரும் அதை பரிசீலிப்பதாகக் கூறி வரும் நிலையில், அதுதொடா்பான அறிவிப்பு நிதி நிலை அறிக்கையில் வெளியாகும் என எதிா்பாா்த்தோம். ஆனால், அத்தகைய அறிவிப்பு ஏதும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி - மதுரை புதன்கிழமை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் மே 13-இல் தொடக்கம்

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

SCROLL FOR NEXT