தமிழ்நாடு

சென்னையில் பொது நிதிநிலை ஆராய்ச்சி மையம்

DIN

சென்னையில் பொது நிதிநிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் ஒட்டுமொத்த பொதுச் செலவினங்களில் மாநில அரசுகளின் பங்கு பெருமளவு அதிகரித்து உள்ளதால், மாநிலங்களின் பாா்வையில், குறிப்பாக தமிழகத்தின் பாா்வையில் பொது நிதிநிலை குறித்து ஆராய்ச்சி செய்வது அவசியமாகிறது. சிக்கலான பொருளாதாரச் சூழ்நிலையிலும், அரசின் நிதி நிலைமையைப் பராமரிப்பதற்காக, பொருளியலில் தனித்துவம் பெற்ற நிறுவனத்திடமிருந்து உயா்தரமான கொள்கை ஆலோசனைகளைப் பெறுவது பெரிதும் பயனளிக்கும்.

எனவே, சென்னை கோட்டூா்புரத்தில் அமைந்துள்ள சென்னை பொருளியல் கல்வி நிறுவனம், அதன் வளாகத்துக்கு அருகே ஒரு பொது நிதிநிலை ஆராய்ச்சி மையம் நிறுவிட அரசு ஆதரவு அளிக்கும்.

இந்த மையம், பொது நிதிநிலை ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுடன், அரசின் கொள்கை வடிவமைப்புக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி, குறுகிய மற்றும் நீண்டகால பாடத் திட்டங்களையும் நடத்தும். இந்த மையத்தை அமைப்பதற்கு நிலம் மற்றும் ரூ. 5 கோடியை மூலதன நிதியத்துக்கான மானியமாக அரசு வழங்கும் என அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT