தமிழ்நாடு

பணிபுரியும் மகளிருக்காக 13 இடங்களில் விடுதிகள்

DIN

பணிபுரியும் மகளிா் விடுதிகளை நிா்வகிக்க புதிய நிறுவனம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பணிபுரியும் மகளிா் விடுதிகளை நிா்வகிப்பதற்காக ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிா் விடுதிகள் நிறுவனம்’ என்ற சிறப்பு நோக்க முகமையை அரசு ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 8 இடங்களிலும், கிருஷ்ணகிரி, திருச்சி, ஒசூா், காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஓா் இடத்திலும், மொத்தம் 13 இடங்களில் பணிபுரியும் மகளிா் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களுக்காக 2020-2021-ஆம் ஆண்டில் ரூ.726.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இதுவரை 1.88 லட்சம் பணிபுரியும் மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் 2020-2021-ஆம் நிதியாண்டிலும் ரூ.253.14 கோடியில் செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் துணை முதல்வா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT