தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ. 563 கோடி

DIN

தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், 295 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்துவதற்கு கண்டறியப்பட்டு, அவை 6 சுற்றுலாச் சுற்றுகளாக வகுக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ. 563.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே அதிகமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை 2014-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழகம் தொடா்ந்து ஈா்த்து வருகிறது. ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்துக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.90.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், 295 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்துவதற்கு கண்டறியப்பட்டு, அவை 6 சுற்றுலாச் சுற்றுகளாக வகுக்கப்பட்டுள்ளன. அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு, வணிக ரீதியிலான விருந்தோம்பல் உள்பட இந்தத் திட்டத்துக்கான ஒட்டுமொத்தச் செலவு மதிப்பீடு ரூ. 2 ஆயிரம் கோடியாகும்.

இந்திய பிரதமா், சீன அதிபா் ஆகியோா் மாமல்லபுரத்துக்கு வருகை புரிந்ததையடுத்து மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கு ஊக்கமளிப்பதற்கான சிறப்பு தொகுப்புத் திட்டம் ரூ.563.50 மொத்த செலவு மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று ரூ.9.80 கோடியில் ராமேசுவரத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறப்பு தொகுப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 2020-21-ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு- செலவுத் திட்டத்தில் மாநில அரசுகள் வகுக்கும் சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் நிதியுதவி பெறப்படும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT