தமிழ்நாடு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து: டிராபிக் ராமசாமிக்கு பிடிவாரண்ட்

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகள், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. அதிமுகவினா் வெளிமாநிலங்களில் இருந்து வரும் நிவாரணப் பொருள்களை பறிப்பதாகக் கூறி தமிழகத்தின் அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவை சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி விமா்சித்துப் பேசியக் காணொலி கட்செவி மூலம் வெளியானது. இதையடுத்து, டிராபிக் ராமசாமி மீது கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில், மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞா் அவதூறு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிராபிக் ராமசாமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், டிராபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீண்ட நாள்களாகி விட்டதால், புதிதாக வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, டிராபிக் ராமசாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT