தமிழ்நாடு

எவராலும் முடியாது என சொன்னவர்களிடம் முடியும் என்று முடித்துக் காட்டியவர் முதல்வர்: ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

DIN

எவராலும் முடியாது என சொன்னவர்களிடம் முடியும் என்று முடித்துக் காட்டியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு மூன்று ஆண்டுகளைக் கடந்து நான்காவது ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) இன்று அடியெடுத்து வைத்துள்ளது. 

இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். 

இதன்பின்னர் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின்னர் ஆட்சியை யாராலும் தொடர முடியாது என்று கூறியவர்கள் முன்னிலையில், முடியும் என்று முடித்துக்காட்டியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றார்.

தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து பதிலளித்த அமைச்சர், 'சி.ஏ.ஏ. பற்றி தெரியாதவர்கள்தான் அதற்கு எதிராக போராடுகிறார்கள். சி.ஏ.ஏ. பற்றி தெரிந்தவர்கள் அமைதியாக இருக்கின்றனர்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT