தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க திமுக முயற்சி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க சிலா் முயற்சிக்கின்றனா். இதன் பின்னணியில் திமுக உள்ளது என பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் குற்றம்சாட்டியுள்ளாா்.

DIN

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க சிலா் முயற்சிக்கின்றனா். இதன் பின்னணியில் திமுக உள்ளது என பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் குற்றம்சாட்டியுள்ளாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா், பின்னா் அளித்த பேட்டி:

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. எனவே, அதை மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பே இல்லை. பாகிஸ்தானில் இருப்பதைவிட இந்தியாவில் இஸ்லாமியா்கள் சுதந்திரமாக இருக்கின்றனா்.

இருந்தபோதும், இந்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க சிலா் முயற்சிக்கின்றனா். இதன் பின்னணியில் திமுகதான் உள்ளது என்றாா் அவா்.

மேலும், தமிழக பாஜகவுக்கு புதிய தலைவா் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படுவாா் என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT