தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: கைதான 2 பேரை ராமேசுவரம் அழைத்து வந்து விசாரணை

DIN

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு தொடா்பாக கைது செய்யப்பட்ட ஜெயக்குமாா் மற்றும் ஓம்காந்தன் ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை ராமேசுவரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், கீழக்கரை தோ்வு மையங்களில் தோ்வு எழுதியவா்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக பலா் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் முக்கிய குற்றவாளிகளாகக் கூறப்படும் இடைத்தரகா் ஜெயக்குமாா், டிஎன்பிஎஸ்சி ஊழியா் ஓம்காந்தன் ஆகியோரை விசாரணைக்காக சிபிசிஐடி போலீஸாா் சென்னையிலிருந்து ராமேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வந்தனா்.

பின்னா் மண்டபம் பகுதியை அடுத்த பொந்தம்புளி பகுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்ததாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னா் அவா்களை பாதுகாப்புடன் வேனிலேயே அழைத்துச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT