தமிழ்நாடு

ராணிப்பேட்டை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 2  பேர் குண்டர் சட்டத்தில் கைது

DIN


ராணிப்பேட்டை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புன்னபாடி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார்(28) அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(26) ஆகிய இருவரும் ஆற்காடு பாலாற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் ஆற்காடு கிராமிய போலீசார் கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில்  இவர்களைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார். 

ஆட்சியர் பிரியதர்ஷினி பரிந்துரையின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் இரண்டு பேருக்கும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT