போச்சம்பள்ளி அருகே மூன்று வீடுகளில் தொடர் திருட்டு
போச்சம்பள்ளி அருகே மூன்று வீடுகளில் நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி அருகே மூன்று வீடுகளில் நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சென்றாய பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி திருப்பதி (55). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு புதன்கிழமை அன்று வெளியே சென்றிருந்தார். இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 15000 திருடி சென்றுள்ளனர்.
செல்லம்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கதிர்வேல் (69), இவரின் வீட்டின் அருகே வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் சாம்பசிவம்(55). இவர்களின் வீட்டிற்கு புகுந்த மர்ம நபர்கள் 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 25 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Advertisement