அடுத்தடுத்து 2 எம்எல்ஏக்கள் மரணம்: திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் அறிவிப்பு
அடுத்தடுத்து இரண்டு திமுக எம்எல்ஏக்கள் மரணம் அடைந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: அடுத்தடுத்து இரண்டு திமுக எம்எல்ஏக்கள் மரணம் அடைந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் பிப்ரவரி 29-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் பிப்ரவரி 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு அறிவாலயத்தில் நடைபெறும். கூட்டத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிப்பார். இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால், திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி. சாமி நேற்று உடல் நலக் குறைவால் சென்னையில் மரணம் அடைந்த நிலையில், குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மாரடைப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் இன்று காலமானார்.
அடுத்தடுத்து திமுக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் மரணம் அடைந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.