தமிழ்நாடு

தமிழகத்தின் முதல் ஊராட்சியான எகுமதுரை ஊராட்சித் தலைவராக ஸ்ரீபிரியா மகேந்திரன் வெற்றி

DIN

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் முடிவாக எகுமதுரை ஊராட்சித் தலைவராக ஸ்ரீபிரியா மகேந்திரன் 400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

தமிழகத்தின் முதல் ஊராட்சி என்ற பெருமைக்குரிய எகுமதுரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஸ்ரீபிரியா மகேந்திரன் மற்றும் சுபா போட்டியிட்ட நிலையில் ஸ்ரீபிரியா மகேந்திரனுக்கு முதல் சுற்றில் 141 ஓட்டும், சுபாவிற்கு 22 ஓட்டும் கிடைத்தன. 

இரண்டாவது சுற்றில் ஸ்ரீபிரியா மகேந்திரன் 328 ஓட்டும், சுபா 87 ஓட்டும், மூன்றாவது சுற்றில் ஸ்ரீபிரியா மகேந்திரன் 149 ஓட்டும், சுபா 161 ஓட்டும், 4வது சுற்றில் ஸ்ரீபிரியா மகேந்திரன் 109 ஓட்டும், சுபா 51 ஓட்டும் பெற்றனர்.

இதன் மூலம் ஸ்ரீபிரியா மகேந்திரன் மொத்தம் 725 ஓட்டுகளும், சுபா 321 ஓட்டுகளும் பெற்ற நிலையில், ஸ்ரீபிரியா மகேந்திரன் 404 வாக்குகள் வித்தியாசத்தில் எகுமதுரை ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு பெற்றார்.

அதே போல 2வது வார்டிற்கு சசிகலா சுரேஷ்குமார், 3வது வார்டில் விஷ்ணுகுமார் வெற்றி பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT