சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை 9ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று காலை தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை வரும் 9ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேரவைக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை (ஜன. 10) வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.