முகப்பு
தமிழ்நாடு

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த பெங்களூரு தொழிலதிபர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

Updated On : 7 ஜனவரி, 2020 at 6:39 PM
பகிர்:

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பெருங்களூருவில் மென்பொருள் நிறுவனம் ஒன்று சிறப்பாக நடைபெற்றதன், காரணமாக திருப்பதி எழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

தொழிலதிபர் அமர்நாத் சௌத்ரி மற்றும் அவர் மனைவியும் ரூ.1 கோடிக்கான வரவோலையை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் நிர்வாக அதிகாரியான ஏ.வி.தர்ம ரெட்டியிடம் ஒப்படைத்ததாகக் கோயிலின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Advertisement

இந்த நன்கொடை பக்தர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் பண்ணையில் வைக்கப்பட்டுள்ள பசுக்களின் நலனுக்குப் பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.