தமிழ்நாடு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் விழுந்தவர் சடலமாக மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்பு

DIN

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சவேரியார் புரத்தைச் சேர்ந்தவர் ஞா. ஜஸ்டின் சாலமோன் (38), நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சகோதரர்களுடன் சேர்ந்து வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.

இவரது மனைவி பூமணி, திருமணமாகி 12 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லாததால் விரக்தியடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு சவேரியார் புரத்தில் உள்ள அவரது தோட்டத்தில் குளிக்கச் சென்ற ஜஸ்டின், வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதுகுறித்து சாதாரண காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் விசாரணை நடத்தி வந்தார். மேலும் சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினர் தோட்டத்திலுள்ள கிணற்றிலும் அவரைத் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை தோட்டத்துக் கிணற்றில் ஜஸ்டின் சாலமோன் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரது சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT