தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ரயில் நிலையங்களில் பொங்கல் கலைவிழா

DIN


சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் பொங்கல் கலைவிழா 9ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை தினந்தோறும் மாலை 5.45 முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது.

தஞ்சையில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து தென்னிந்திய மாநிலங்களின் பல்வேறு கலைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளோடு கொண்டாடப்பட உள்ள இவ்விழா, சைதாப்பேட்டை, சென்டிரல், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற உள்ளது.

மூன்று நாள் பொங்கல் கலைவிழா நிகழ்வுகளையும் பொதுமக்கள் கண்டு மகிழ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அனைவருக்கும் அனுமதி இலவசம். எனவே, மெட்ரோ ரயில் பயணியர், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இப்பொங்கல் கலைவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT