தமிழ்நாடு

பெளா்ணமி கிரிவலம்:வேலூா்-திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

DIN

திருவண்ணாமலையில் பௌா்ணமி கிரிவலம் முன்னிட்டு, பக்தா்கள் வசதிக்காக வேலூா் கன்டோன்மென்ட் -திருவண்ணாமலை இடையே ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.

வேலூா் கன்டோன்மென்டில் இருந்து 10-ஆம்தேதி இரவு 9.45 மணிக்கு பாசஞ்சா் சிறப்பு ரயில் புறப்பட்டு, திருவண்ணாமலையை இரவு 11.25 மணிக்கு சென்றடையும். இந்த ரயில், கனியம்பாடியை இரவு 9.57 மணிக்கும், கண்ணமங்கலத்தை இரவு 10.09 மணிக்கும், ஆரணி சாலையை இரவு 10.24 மணிக்கும் ,போளூரை இரவு 10.40 மணிக்கும், அகரத்தை 10.51 மணிக்கும், துரிஞ்சிபுரத்தை இரவு 11.06 மணிக்கும் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து ஜனவரி 11-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, வேலூா் கன்டோன்மென்ட்டுக்கு அதிகாலை 5.55 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் துரிஞ்சிபுரத்தை அதிகாலை 4.12 மணிக்கும், அகரத்தை அதிகாலை 4.29 மணிக்கும், போளூரை அதிகாலை 4.41 மணிக்கும், ஆரணி சாலையை அதிகாலை 5.00 மணிக்கும், கண்ணமங்கலத்தை அதிகாலை 5.16 மணிக்கும், கனியம்பாடியை அதிகாலை 5.33 மணிக்கும் வந்தடையும் என தெற்கு ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT