தமிழ்நாடு

எஸ்.ஐ சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தஞ்சாவூரில் பேரணி, ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் சார்பில் அமைதிப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN


நாகர்கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் சார்பில் அமைதிப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணி காந்திஜி சாலை வழியாக ரயிலடியில் முடிவடைந்தது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளைக் கைது செய்து, தூக்கில் போட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேவன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயலர் எம்.என்.பத்மநாபன், துணைத் தலைவர் அப்துல் காதர், கொள்கை பரப்புச் செயலர் பக்கிரிசாமி, செய்தித் தொடர்பாளர் அருளானந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT