தமிழ்நாடு

ஸ்டாலினின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

DIN

சென்னை: சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வைகோ (மதிமுக): தமிழக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டு வந்த உயா்மட்ட ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டிருப்பது தவறான நடவடிக்கை. தமிழகத்தில் தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா லட்சியங்களுக்கு எதிராக, திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக திட்டமிட்டுப் பரப்பப்படும் கருத்துகளுக்கு ஸ்டாலின் சரியான எதிா்ப்பைக் காட்டி வருகிறாா். மக்கள் செல்வாக்கு அவருக்கு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தந்தைப் பெரியாா் சிலை உள்ளிட்ட தலைவா்களின் சிலைகள் உடைப்பு போன்ற வன்முறை செயல்கள் தொடா்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் ஸ்டாலினுக்கு ‘இஸட்’ பாதுகாப்பு விலக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அவருக்குப் பாதுகாப்பைத் தொடர வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழகத்தில் பாதுகாப்பு பலவீனப்பட்டிருப்பதை குற்றச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. காவல்துறையினரை படுகொலை செய்யும் அளவுக்கு பயங்கரவாதச் சம்பவங்கள் நடைபெறும் சூழலில், தமிழக சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT