முகப்பு
தமிழ்நாடு

மணப்பாறை தொகுதியில் மூன்று இடங்களையும் கைப்பற்றிய திமுக

மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மூன்று ஒன்றியக்குழு பெருந்தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:27 PM
பகிர்:

மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மூன்று ஒன்றியக்குழு பெருந்தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியுள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில், ஒன்றியக்குழு பெருந்தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மூலம் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

இதில் 14-வது வார்டு திமுக வேட்பாளரான ஆர்.அமிர்தவள்ளி போட்டியின்றி ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 17 பேர் கொண்ட ஒன்றியக்குழுவிலிருந்து மறைமுகட்ஜ் தேர்தலில், ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற திமுகவினர் 12 பேரும், சுயேட்சை ஒருவரும் தேர்தல் நடைபெற்ற இடத்திற்கு வந்திருந்தனர்.

வையம்பட்டி ஒன்றியத்தில் 16 பேர் கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்களில், ஒன்றியக்குழு பெருந்தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த செல்வி, திமுகவினை சேர்ந்த குணசீலன் என இருவர் போட்டியிட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த குணசீலன் என்பவர் 10 வாக்குகள் பெற்று ஒன்றியக்குழு பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல், மருங்காபுரி ஒன்றியத்தில், ஒன்றியக்குழு பெருந்தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் 9வது வார்டைச் சேர்ந்த திமுக வேட்பாளர் பழனியாண்டி போட்டியின்றி ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →