முகப்பு
தமிழ்நாடு

பரோல் நிறைவடைந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனின் இரண்டு மாத பரோல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:27 PM
பகிர்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனின் இரண்டு மாத பரோல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக சிறையிலுள்ள பேரறிவாளன் அவரது தந்தையின் உடல்நலக் குறைவு காரணமாகவும், சகோதரியின் மகள் திருமணத்துக்காகவும் அவரது தாயாா் அற்புதம்மாள் அளித்த கோரிக்கை மனுவின் பேரில், அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த நவம்பா் 12ம் தேதி புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் தனது சொந்த ஊரான ஜோலாா்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டாா். 

பரோல் முடிந்து கடந்த டிசம்பா் 13ம் தேதி பேரறிவாளன் புழல் சிறைக்கு செல்ல இருந்த நிலையில், அவரது தாயாா் அற்புதம்மாள் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தாா். அதன்பேரில் தமிழக அரசு மீண்டும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் 2 மாத பரோல் முடிந்து பேரறிவாளன் ஞாயிற்றுக்கிழமை சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.