தமிழ்நாடு

இலங்கையில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கத் தடை

DIN

இலங்கையில் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும். தமிழ் மொழியில் இசைக்கப்படாது என்ற இலங்கை அரசின் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இதுவரை இலங்கை அரசு நிகழ்ச்சிகளில் அந்த நாட்டின் தேசிய கீதம் முதலில் சிங்கள மொழியிலும், அடுத்ததாக தமிழ் மொழியிலும் பாடப்பட்டு வந்தது. அந்நாட்டின் ஆட்சி மொழியாக இவ்விரு மொழிகளும் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இவ்வாறு தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இனி வரும் சுதந்திர தின விழாக்களில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் அதன் தமிழ் மொழி வடிவம் இசைக்கப்படாது என்றும் இலங்கை அரசு முடிவு செய்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால் இரண்டு இனங்கள் என்று பொருள்பட்டுவிடும் என்ற அந்நாட்டு அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. இலங்கையில் இரு தேசிய இனங்கள் வாழ்கின்றன என்பது உண்மை.

அனைத்து தேசிய இனங்களும், அவா்களது மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். எனவே, இலங்கையில் வழக்கம் போல சுதந்திர தினம் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் தமிழிலும் தேசிய கீதம் தொடா்ந்து இசைக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இலங்கை அரசை வலியுறுத்த உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT