தமிழ்நாடு

தமிழ் முறைப்படி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும்: பெ. மணியரசன்

DIN


தமிழ் முறைப்படி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும் என்று தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் வலியுறுத்தினார்.

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
தமிழ் கலாசாரத்தின் அடையாளமாக ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா, பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு சார்பில் வலியுறுத்தி வருகிறோம். இதற்காக, இந்து சமய அறநிலையத் துறை, மற்றும் தொல்லியல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.  தொல்லியல் துறையிலிருந்து இதற்கு எங்களுக்கு அதிகாரம் கிடையாது என பதில் வந்துள்ளது.

தஞ்சை பெரிய கோயில், தமிழர்களுக்கான கோயில். ஆகமம் என்பது தமிழர்களுக்கே உரியது. எனவே இந்து அறநிலையத் துறை உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ் முறைப்படி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை நடத்த வேண்டும்.
இந்திய அலுவல் மொழிக்கான மக்களவைக்குழு உள்ளது. இந்தக்குழு, மத்திய அரசு அலுவலகங்களுக்கு சென்று, ஹிந்தி எந்த அளவுக்கு பரப்பட்டிருக்கின்றது என ஆய்வு செய்து, ஹிந்தியை மேலும் பரவலாக்கும் வகையிலான பணிகளை செய்து வருகிறது. இந்தக் குழு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை, ஜனவரி 14, 15, 16 ஆகிய நாள்களில் ஆய்வு செய்கிறது. இந்த 3 நாள்களும் மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும். 

 தமிழக அரசு, இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும்நிலையில், மத்திய அரசின் இந்திய அலுவல் மொழிக்கான மக்களவைக் குழு, தமிழகத்தில் 14, 15, 16 ஆகிய தேதிகளில் மத்திய அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. தமிழர் பண்டிகையான பொங்கல் நேரத்தில், இந்தக் குழு வருவது தமிழர் பண்டிகையை இழிவுபடுத்துவது போல உள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், மத்திய அரசின் மொழி ஆய்வுக்குழு ஆய்வு மேற்கொள்ள வருவது கண்டிக்கத்தக்கது. எனவே, இந்த ஆய்வு நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார் மணியரசன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஷருடன் டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஒப்பந்தம்

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT