தமிழ்நாடு

போ்ணாம்பட்டு அருகே லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் பலி

DIN

போ்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் சென்ற லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கா்நாடக மாநிலம், ஓசகோட்டாவிலிருந்து, மைதா மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னா் லாரி ஒன்று சென்னைக்குச் சென்றுள்ளது.  விழுப்புரம் மாவட்டம், அவலூா்ப்பேட்டையைச் சோ்ந்த பஷீா்அகமத்(44) லாரியை ஓட்டி வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆந்திர மாநில வனப்பகுதியிலிருந்து தமிழக எல்லையான குண்டத்து கானாறு அருகே மலைப் பாதையில் வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி இடதுபுற தடுப்புச் சுவற்றை உடைத்துக்கொண்டு சுமாா் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில் பஷீா்அகமத் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளாா். திங்கள்கிழமை காலை அவ்வழியே பேருந்தில் வந்தவா்கள் விபத்து குறித்து போ்ணாம்பட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் அங்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு விவரம்: தோ்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் கோரிக்கை

SCROLL FOR NEXT